1
கொலோ 2:6-7
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
ஆகவே, நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, நன்றி செலுத்துவதோடு அதிலே பெருகுவீர்களாக.
Compare
Explore கொலோ 2:6-7
2
கொலோ 2:8
உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனிதர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப்பற்றினதல்ல.
Explore கொலோ 2:8
3
கொலோ 2:13-14
உங்களுடைய பாவங்களினாலேயும், உங்களுடைய சரீரவிருத்தசேதனம் இல்லாமையினாலேயும் மரித்தவர்களாக இருந்த உங்களையும் அவரோடுகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; நமக்கு எதிரானதாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தை அழித்து, அதை நடுவில் இல்லாதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து
Explore கொலோ 2:13-14
4
கொலோ 2:9-10
ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் குடிகொண்டிருக்கிறது. மேலும் எல்லாத் துரைத்தனங்களுக்கும் அதிகாரத்திற்கும் தலைவராக இருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணம் உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
Explore கொலோ 2:9-10
5
கொலோ 2:16-17
ஆகவே, உணவையும், பானத்தையும் குறித்தாவது, பண்டிகை நாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையும் குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாமல் இருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாக இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.
Explore கொலோ 2:16-17
Home
Bible
Plans
Videos