பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும்,
எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும்,
கோணலானவைகள் நேராகும்,
கரடானவைகள் சமமாகும் என்றும்,
மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும்,
வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்”
என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.