1
கலாத்தியர் 3:13
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார்.
Compare
Explore கலாத்தியர் 3:13
2
கலாத்தியர் 3:28
நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை.
Explore கலாத்தியர் 3:28
3
கலாத்தியர் 3:29
நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள்.
Explore கலாத்தியர் 3:29
4
கலாத்தியர் 3:14
ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.
Explore கலாத்தியர் 3:14
5
கலாத்தியர் 3:11
எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” என்றும் எழுதியிருக்கிறது.
Explore கலாத்தியர் 3:11
Home
Bible
Plans
Videos