ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது;
அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன;
யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும்,
மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும்,
உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும்.
அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும்,
கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும்,
மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும்
உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார்.