1
மத்தேயு 16:24
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இதன்பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “எவனாவது என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னையே துறந்து, தனது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும்.
Compare
Explore மத்தேயு 16:24
2
மத்தேயு 16:18
நான் உனக்குச் சொல்கின்றேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின் மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ள மாட்டாது.
Explore மத்தேயு 16:18
3
மத்தேயு 16:19
நான் உனக்கு பரலோக அரசின் சாவிகளைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.
Explore மத்தேயு 16:19
4
மத்தேயு 16:25
தனது உயிரை தனக்கென்று காத்துக்கொள்கின்றவன், அதை இழந்து போவான். ஆனால் தனது உயிரை எனக்காக இழக்கிறவன், அதைக் காத்துக்கொள்வான்.
Explore மத்தேயு 16:25
5
மத்தேயு 16:26
ஏனெனில், ஒருவன் உலகம் முழுவதையும் உரிமையாக்கிக் கொண்டாலும், தனது ஆத்துமாவை இழந்து போனால், அதனால் அவனுக்குப் பலன் என்ன? அல்லது ஒருவன் தனது ஆத்துமாவுக்கு மாற்றீடாக எதைக் கொடுக்கலாம்?
Explore மத்தேயு 16:26
6
மத்தேயு 16:15-16
அப்போது அவர், “நீங்கள் என்னை யாரென்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீர் மேசியா, உயிருள்ள இறைவனின் மகன்” என்றான்.
Explore மத்தேயு 16:15-16
7
மத்தேயு 16:17
அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கின்ற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.
Explore மத்தேயு 16:17
Home
Bible
Plans
Videos