YouVersion Logo
Search Icon

2 கொரி 5

5
அத்தியாயம் 5
பவுலின் பாடுகளுக்கான காரணங்கள்
1பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய சரீரம் அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலை இல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2ஏனென்றால், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வீட்டை அணிந்துகொள்ள அதிக ஏக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; 3அணிந்துகொண்டவர்களானால், நிர்வாணிகளாகக் காணப்படமாட்டோம். 4இந்தக் கூடாரத்தில் இருக்கிற நாம் சுமை சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்து போடவேண்டும் என்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காக போர்வை தரித்தவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். 5இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவி என்னும் உத்திரவாதத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 6நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம். 7இந்த சரீரத்தில் குடியிருக்கும்போது கர்த்தரிடம் குடியில்லாதவர்களாக இருக்கிறோம் என்று தெரிந்தும், எப்பொழுதும் தைரியமாக இருக்கிறோம். 8நாம் தைரியமாகவே இருந்து, இந்த சரீரத்தைவிட்டுப் போகவும் கர்த்தரிடம் குடியிருக்கவும் அதிகமாக விரும்புகிறோம். 9அதினாலேயே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியில்லாமல் போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாக இருக்கவிரும்புகிறோம். 10ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தகுந்த பலனைப் பெற்றுக்கொள்வதற்காக, நாமெல்லோரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கவேண்டும்.
ஒப்புரவாக்குதலின் ஊழியம்
11எனவே, கர்த்தருக்குப் பயப்படவேண்டும் என்று அறிந்து, மனிதர்களுக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்குமுன்பாக வெளிப்படையாக இருக்கிறோம்; உங்களுடைய மனச்சாட்சிக்கும் வெளிப்படையாக இருக்கிறோம் என்று நம்புகிறேன். 12இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மீண்டும் பெருமைப்படுத்திக்கொள்ளாமல், இருதயத்தில் இல்லை, வெளிவேஷத்தில் மேன்மை பாராட்டுகிறவர்களுக்கு எதிரே, எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படி வாய்ப்பை உண்டாக்குகிறோம். 13நாங்கள் பைத்தியம் பிடித்தவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கிறோம்; தெளிந்த புத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கிறோம். 14கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது; ஏனென்றால், எல்லோருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லோரும் மரித்தார்கள் என்றும்; 15வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று வாழாமல், தங்களுக்காக மரித்து உயிரோடு எழுந்தவருக்கென்று வாழ்வதற்காக, அவர் எல்லோருக்காகவும் மரித்தார் என்றும் நிதானிக்கிறோம். 16எனவே, இனிமேல், நாங்கள் ஒருவனையும் சரீரத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் சரீரத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை சரீரத்தின்படி அறியோம். 17இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவிற்குள் இருந்தால் புதுப்படைப்பாக இருக்கிறான்; பழையவைகள் எல்லாம் ஒழிந்துபோனது, எல்லாம் புதிதானது. 18இவைகளெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மை அவரோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 19அது என்னவென்றால், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவிற்குள் அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடம் ஒப்புவித்தார். 20ஆகவே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக இருந்து, தேவனோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவினால் உங்களை வேண்டிக்கொள்கிறோம். 21நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாக இருப்பதற்காக, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

Currently Selected:

2 கொரி 5: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in