YouVersion Logo
Search Icon

சங்கீதம் 133

133
சங்கீதம் 133
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1இறைவனின் மக்கள் ஒற்றுமையுடன் ஒருமித்து வாழ்வது எவ்வளவு நல்லதும்,
எவ்வளவு மகிழ்ச்சிக்குரியதுமாய் இருக்கிறது!
2அது தலையில் ஊற்றப்பட்டு தாடியில் வடிகின்ற
விலையேறப்பெற்ற எண்ணெய்போல் இருக்கிறது;
ஆரோனின் தாடியில் வடிந்து,
அவனுடைய அங்கிகளின் கழுத்துப்பட்டியில் இறங்கும் எண்ணெய்போல் இருக்கிறது.
3எர்மோன் மலையின் பனி
சீயோனின் மலைகள்மேல் இறங்குவதைப்போல் அது இருக்கிறது;
ஏனெனில் அங்கே யெகோவா தமது ஆசீர்வாதத்தை வழங்குகிறார்;
வாழ்வையும் என்றென்றைக்கும் வழங்குகிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in