லூக்கா 7:7-9
லூக்கா 7:7-9 TRV
உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை கட்டளையிடும், அப்போது என் வேலைக்காரன் குணமடைவான். ஏனெனில், நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்ட ஒருவனாய் இருக்கின்றேன்; எனக்குக் கீழேயும் இராணுவ வீரர்கள் இருக்கின்றார்கள். நான் இவனைப் பார்த்து ‘போ’ என்றால் இவன் போகின்றான்; அவனைப் பார்த்து ‘வா’ என்றால் அவன் வருகின்றான். எனது வேலைக்காரனிடம் ‘இதைச் செய்’ என்றால் அவன் செய்கின்றான்.” இயேசு இதைக் கேட்டபோது, அவனைக் குறித்து வியப்படைந்தவராய், தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும்கூட கண்டதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கின்றேன்” என்றார்.