ஆதியாகமம் 10

10
நாடுகளின் அட்டவணை
1பெருவெள்ளத்திற்கு பிறகு நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களுக்கு, பிறந்த மகன்களின் வம்சவரலாறு.
யாப்பேத்தியர்
2யாப்பேத்தின் மகன்கள்#10:2 மகன்கள் என்றால் வம்சாவழி அல்லது மக்கள் குழுக்கள் என்றும் பொருள்படும்.:
கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ்.
3கோமரின் மகன்கள்:
அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
4யாவானின் மகன்கள்:
எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம். 5இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள், தங்கள் வம்சங்களின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன், தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
காமியர்
6காமின் மகன்கள்:
கூஷ், மிஸ்ராயீம்#10:6 மிஸ்ராயீம் என்றால் எகிப்தில் குடியேறின சந்ததியினர்., பூத், கானான்.
7கூஷின் மகன்கள்:
சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா.
ராமாவின் மகன்கள்:
சேபா, திதான்.
8கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான். 9அவன் யெகோவாவின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால்தான், “யெகோவா முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோதைப்போல்” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று. 10சிநெயார்#10:10 அதாவது, பாபிலோனியாவின் மற்றொரு பெயர். நாட்டிலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகிய இடங்களே அவனுடைய அரசாட்சியின் முக்கிய இடங்களாயிருந்தன. 11அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத் ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான். 12நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
13மிஸ்ராயீமின் சந்ததிகள்:
லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், 14பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தோரியர்.
15கானானின் சந்ததிகள்:
மூத்த மகன் சீதோன், கேத்து, 16எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17ஏவியர், அர்கீயர், சீனியர், 18அர்வாதியர், செமாரியர், காமாத்தியர்.
பின்பு கானானிய வம்சத்தினர் பல இடங்களிலும் குடியேறினர். 19கானானியரின் எல்லை சீதோன் முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், பின்பு சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் பரந்திருந்தது.
20அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும், தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்கள் இவர்களே.
சேமியர்
21சேமுக்கு மகன்கள் பிறந்தார்கள், அவனுடைய மூத்த சகோதரன் யாப்பேத்; சேம் ஏபேரின் மகன்கள் எல்லாருக்கும் முற்பிதாவாய் இருந்தான்.
22சேமின் மகன்கள்:
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்.
23ஆராமின் மகன்கள்:
ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்.
24அர்பக்சாத் சேலாவின் தகப்பன்,
சேலா ஏபேரின் தகப்பன்.
25ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.
ஒருவன் பெயர் பேலேகு, ஏனெனில், அவன் காலத்தில் பூமியிலுள்ள மக்கள் வெவ்வேறு மொழி குழுக்களாக பிரிக்கப்பட்டனர்; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
26யொக்தான் என்பவன்,
அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு, 27அதோராம், ஊசால், திக்லா, 28ஓபால், அபிமாயேல், சேபா, 29ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரின் தகப்பன். இவர்களே யொக்தானின் மகன்கள்.
30இவர்கள் குடியிருந்த பிரதேசம் மேசாவிலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார்வரை பரவியிருந்தது.
31அவரவர் வம்சங்களின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.
32தங்கள் நாடுகளிலுள்ள நோவாவுடைய மகன்களின் வழிவந்த குடும்பவாரியான வம்சங்களின் சந்ததிகள் இவையே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்திற்கு பிறகு பூமியெங்கும் நாடுகள் பரவின.

Paryškinti

Dalintis

Kopijuoti

None

Norite, kad paryškinimai būtų įrašyti visuose jūsų įrenginiuose? Prisijunkite arba registruokitės