2 பேது 3:1-7

2 பேது 3:1-7 IRVTAM

பிரியமானவர்களே, இந்த இரண்டாம் கடிதத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்னமே சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராக இருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலர்களாகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைத்துப்பார்ப்பதற்காக இந்தக் கடிதங்களினால் உங்களுடைய உண்மையான மனதை ஞாபகப்படுத்தி எழுப்புகிறேன். முதலாவது நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: கடைசிநாட்களில் பரிகாசக்காரர்கள் வந்து, தங்களுடைய சுய இச்சைகளின்படி நடந்து, அவர் திரும்பவருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? முற்பிதாக்கள் மரித்தபின்பு எல்லாக் காரியங்களும் படைப்பின் ஆரம்பத்தில் இருந்தவிதமாகவே இருக்கிறதே என்று சொல்லுவார்கள். ஆதிகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும் பூமியும் தண்ணீரிலிருந்து தோன்றி தண்ணீரினாலே நிலைகொண்டிருக்கிறது என்பதையும், அப்பொழுது இருந்த உலகம் பெருவெள்ளத்தினாலே அழிந்தது என்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அதே வார்த்தையினாலே நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தி இல்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரை காக்கப்பட்டிருக்கிறது.