2 யோவான் முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 86 ஆம் ஆண்டிலிருந்து 96 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் அப்போஸ்தலன் யோவானால் எழுதப்பட்டது. இச்சிறு கடிதம் துன்புறுத்தலின் காலத்தில் எழுதப்பட்டதால் திருச்சபைக்கு என்று எழுதப்படாமல், ஒரு பெண்மணிக்கு எழுதுவது போல் திருச்சபைக்கு எழுதியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. உண்மையான கிறிஸ்தவ அன்பை ஊக்குவிப்பதற்கும், உலகத்தில் வரும் ஏமாற்றுக்காரர்களைக் குறித்து எச்சரிக்கை செய்யவுமே அவர் இதை எழுதுதினார். ஏமாற்றுக்காரருடைய தீயசெயல்களில் பங்குகொள்ளாமல் விசுவாசிகள் உண்மைக்காக உறுதியுடன் நிற்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். போலியான கோட்பாடுகளைக் குறித்து விசுவாசிகள் விழிப்புடையவர்களாய் இருக்கவேண்டும் என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

2 யோவான் முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்