பயத்தை மேற்கொள்ளுதல்மாதிரி
பயத்தை மேற்கொள்ளுதல் - நாம் யார் என்பதை அறிந்தகொள்ளுதல்
எங்கு - அல்லது மிக முக்கியமாக - யாருக்குள் என்னுடைய அடையாளம் காணப்படுகிறது?
என்னைப் பொருத்தமட்டில், பல கிரிக்கெட் வீரர்களைப் போலவும், என்னுடைய அடையாளம், ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடுவதிலும், மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பதைக் கொண்டும் இருக்கிறது. ஆனால், கிறிஸ்துவுக்குள் நான் என்னை வேரூன்றும்போது மாத்திரமே, என்னுடைய அடையாளம் இயேசுகிறிஸ்துவுக்குள் காணப்படுகிறதாக அமையும் என்கிற உண்மையை, சென்றுபோன காலங்களில் நான் கற்றுக்கொண்ட பாடமாகும்.
இந்த கிரிக்கெட் உலகில், பயிற்சியாளர்களும் நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களே முக்கியமானதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்ட கருத்துக்களால் நாம் அலசடிப்படாமலும், குழப்பமடையாமலுமிருப்பதில் நாம் மிகவும் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய கருத்துகளுக்கு நாம் நம்மை உட்படுத்தினால், அந்த பயிற்சியாளர்கள், உடன் வீரர்கள், மற்றும் ரசிகர்களின் மூலம் நம்முடைய மதிப்பை அவர்கள் அளவிட நாம் விட்டுக்கொடுத்ததுபோன்று ஆகிவிடும். அப்படி நாம் அனுமதிக்கும்போது, நம்முடைய சுய மதிப்பீடு, அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் அமைந்தாக காணப்படும். இப்படிப்பட்ட காரியங்கள் நம்முடைய வாழ்க்கையில் நிகழாமல் காத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் தொழிலதிபராகவோ, பெருநிருவன ஊழியராகவோ, அரசாங்க பணியாளரோ, அல்லது மாணவனாகவோ என எதுவாக நான் இருந்தாலும், என்னுடைய அடையாளம் எதிலிருக்கிறது, யாருடைய கருத்துக்களை நான் பெரிதும் ஏற்றுக்கொள்ளுகிறேன் என்பதை நான் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.
எனக்கு: என்னுடைய அடையாளம் கிறிஸ்துவுக்குள் இருக்கிறதுமன்றி, அவர் என்னைக் குறித்து என்ன சொல்லுகிறாரோ அதையே நான் விசுவாசிக்கிறேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜெ.பி.டுமினி, பயத்தை எதிர்கொண்டு மேற்கொள்ளுதல் பற்றிய தன் தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொள்ளுகிறார். நாம் அவருக்கு பயப்படும் பயத்தை உறுதிப்படுத்துவதற்காக, நம்முடைய உண்மையான மதிப்பையும் தகுதியையும் புரிந்துகொண்டு, சர்வ வல்லமை பொருந்திய சிருஷ்டிகராகிய தேவனை நோக்கிப் பார்ப்பதின் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
More
இந்த திட்டத்தை வழங்கிய JP Duminy க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://jp21foundation.org/