உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்மாதிரி
பயத்தை வெளியே எறிதல்
அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. – 1 யோவாண் 4:18
மூன்றெழுத்து வார்த்தையை பற்றி உங்களுடன் பேச விரும்புகிறேன்: பயம்!
நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மில் அநேகர் கெட்ட வார்த்தை சொன்ன போது, நம் அம்மா வாயை சோப்பு போட்டு கழுவி விடுவேன் என்று பயமுறுத்தியது நினைவில் இருக்கலாம். எனவே ‘பயம்’ என்பது ஒரு அழுக்கான கெட்ட மூன்றெழுத்து வார்த்தையெனில், தேவனுடைய அன்பிலே வைத்திருக்கும் விசுவாசமானது சோப்பாகும்!
நான் கோழைத்தனமான, பலவீனமான, விசுவாசம் பற்றி சொல்லவில்லை. நான் தேவன் நம்மீது கொண்டிருக்கும் நிபந்தனையற்ற, அளவற்ற, அசைவற்ற பரிபூரணமான அன்பின் மீது கொண்டிருக்கும் வல்லமையான விசுவாசத்தைப் பற்றி பேசுகிறேன்.
1 யோவான் 4:18 ல், தேவன் நம்மேல் கொண்டிருக்கும் அன்பை பற்றி விளங்கிக் கொள்வது நம் பயத்தில் இருந்து நம்மை விடுவிக்கும் என்று போதிக்கிறது. அப்படி என்றால் நான் பயத்தை உணரவே மாட்டேன் என்று அர்த்தமாகாது. ஆனால் தேவன் பெயரிலும், அவரது அன்பின் பெயரிலும் கொண்டிருக்கும் விசுவாசமானது, நாம் செய்ய வேண்டியதை பயந்துகொண்டேயாவது செய்ய நம்மை ஏதுவாக்கும்.
தேவன் உங்களோடு இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். அவர் உங்களை வழிநடத்தி முன் செல்வார். எனவே உங்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அவர் மீது வைக்கலாம். நினைவில் கொள்ளுங்கள். நாம் பரிபூரணமாக இல்லாவிட்டாலும், அவருடைய அன்பு பரிபூரணம் ஆனது. நம்முடைய தவறுகளின் நிமித்தமாக அவர் நம்மை அதிகமாகவோ குறைவாகவோ நேசிக்கிறதில்லை. நீங்கள் எங்கே இருக்கின்றீர்களோ அங்கே தானே தேவன் உங்களை நேசிக்கிறார் என்பதை அறிந்து கொள்வது எவ்வளவு நன்றாக இருக்கிறது. அந்த எண்ணம் மட்டுமே உங்கள் விசுவாசத்தை தூண்டி, உங்கள் பயத்தை ஒன்றுமில்லாமல் மாற்றி விடுகிறது. இல்லையா?
நீங்களும் நானும் அவ்வப்போது பயத்தை உணரத்தான் போகின்றோம். அப்படி உணரும்போது நாம் நமது கவனத்தை தேவன் மீது செலுத்தி, நாம் எதிர்நோக்கும் எத்தகைய சூழ்நிலையிலும் அவர் நம்மை நடத்துவார் என்பதை அறிந்து கொள்வோமாக.
பரிபூரணமான நாம் அல்ல, பரிபூரணமான தேவ சித்தமே ஒவ்வொரு முறையும் பயத்தை புறம்பே தள்ளும்.
ஜெபம்
தேவனே, உம்முடைய அன்பு தான் என் பயத்தை போக்கும். எனவே என்னுடைய விசுவாசத்தை உம்மீது வைக்கிறேன். உம்முடைய பிரசன்னம் என்னுடன் இருக்கிறதென்றும், நான் எதிர்நோக்கும் எந்தவொரு பயமுள்ள சூழ்நிலையினூடேயும் நீர் என்னை நடத்துவீர் என்றும் அறிந்திருக்கிறேன். உம் அன்பை பெற்றுக்கொள்கிறேன்.
மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!
More
இந்த திட்டத்தை வழங்கிய ஜாய்ஸ் மேயர் அமைச்சகங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tv.joycemeyer.org/tamil/