தாவீதின் சங்கீதங்கள் மாதிரி
1,2,3 ஸ்டார்ட்
மார்க் ட்வைன் என்னும் எழுத்தாளர் பாடல்கள் பாடுவதைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார், “எல்லோரும் பாடுகின்றார்கள். இங்கே உலகத்தில் பாடாதவனும் அங்கே மோட்சத்தில் பாடுவான். இங்கே பாட முடியாதவர்களும் அங்கே பாட முடியும். இந்த உலகளாவிய அளவில் பாடுதல் என்பது சாதாரணமானதோ, எப்போதாவது நடப்பதோ, இடைவெளிகள் உள்ளதோ அல்ல. இது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். அனைவருமே இருந்து கவனிப்பார்கள். உலகத்தில் பாடல் முடிந்து இரண்டு மணி நேரத்தில் எல்லோரும் போய்விடுவார்கள். கோடிக்கணக்கான குரல்கள் ஒரே நேரத்தில் பாடுவது என்பது எத்தனை பெரும் சத்தமாக, புயலைப் போல இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.”
பரலோகத்தின் பாடல் எப்படி இருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும் இந்த உலகத்தில் நாம் ஆண்டவரைத் துதிக்க வேண்டும். நமது உதடுகளின் பாடல்களால் மட்டுமல்ல, உள்ளத்தின் நினைவுகளாலும், உடலில் செயல்களாலும் நாம் கடவுளைப் பாடி மகிமைப்படுத்தலாம்.
தாவீது தன் ஜனங்களுக்குள்ளே மட்டுமல்ல உலகத்தின் எல்லா ஜாதி ஜனங்களுக்கு முன் கடவுளைப் பாடித்துதிப்பதாகச் சொல்கிறார். கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
இயேசு கிறிஸ்துவும் மற்ற மக்களுக்கு முன்பாக நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் போது, மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன் பிரகாசிக்கக் கடவது என்கிறார். நமது பாடல்கள் மட்டுமல்ல, நமது செயல்களும் கடவுளுக்கு மகிமையைக் கொண்டு வருகின்றன.
சிந்தனை : கடவுளுக்காகப் பாடும் போது குரலைவிட குணமே முக்கியம்.
ஜெபம் : ஆண்டவரே எனது பாடல்களும் எனது வாழ்வின் செயல்களும் உமக்குப் புகழைக் கொண்டுவர எனக்கு உதவி செய்யும். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
சங்கீதங்களில் பாதி தாவீது எழுதியதாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் அரசனாக,, பாடலாசிரியராக, நாயகனாக இருந்த தாவீதின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அதிகம் உண்டு. இங்கே சிலவற்றைக் காணவிருக்கிறோம். ஒரே வசனமும் எளிதாகப் புரியும் வகையில் சிறிய விளக்கமும், நினைவில் வைக்க ஒரு சிந்தனையும், சிறிய ஜெபமும் இதில் உண்டு.
More
இந்த திட்டத்தை வழங்கிய YAWAY MEDIA க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு வருகை: http://www.yaway.org