1
லூக்கா 11:13
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால், பரலோகத்திலிருக்கின்ற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!” என்றார்.
Compare
Explore லூக்கா 11:13
2
லூக்கா 11:9
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்வதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டுகொள்வீர்கள்; கதவைத் தட்டுங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும்.
Explore லூக்கா 11:9
3
லூக்கா 11:10
ஏனெனில், கேட்கின்ற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கின்றான்; தேடுகிறவன் கண்டுகொள்கின்றான்; கதவைத் தட்டுகிறவனுக்குத் திறக்கப்படுகிறது.
Explore லூக்கா 11:10
4
லூக்கா 11:2
அப்போது அவர், “நீங்கள் மன்றாடும்போது சொல்ல வேண்டியது: “ ‘பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உமது அரசு வருவதாக. உமது விருப்பம் பரலோகத்தில் செய்யப்படுவது போல் பூமியிலும் செய்யப்படுவதாக.
Explore லூக்கா 11:2
5
லூக்கா 11:4
எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். ஏனெனில் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னிக்கின்றோமே. எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல், தீமையிலிருந்து எங்களைக் காத்துக்கொள்ளும்’ ” என்பதே.
Explore லூக்கா 11:4
6
லூக்கா 11:3
எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்.
Explore லூக்கா 11:3
7
லூக்கா 11:34
உங்களுடைய கண் உங்கள் உடலின் விளக்காய் இருக்கின்றது. உங்களுடைய கண்கள் நல்லதாய் இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாய் இருக்கும். ஆனால் அவை கெட்டுப்போய் இருந்தால், உங்கள் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும்.
Explore லூக்கா 11:34
8
லூக்கா 11:33
“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைவான ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகின்றவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, விளக்குத் தண்டின் மேல் வைப்பார்கள்.
Explore லூக்கா 11:33
Home
Bible
Plans
Videos