இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், உடல் முழுவதும் தொழுநோயுள்ள ஒரு மனிதன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைக் குணமாக்கிச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று மன்றாடினான்.
அப்போது இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, “எனக்கு விருப்பம் உண்டு, நீ சுத்தமடைவாயாக” என்றார். உடனே தொழுநோய் அவனைவிட்டு நீங்கியது.