1
மாற்கு 5:34
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அவர் அவளைப் பார்த்து, “மகளே, உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது. சமாதானத்துடனே போ. உன் வேதனை நீங்கி குணமடை” என்றார்.
Compare
Explore மாற்கு 5:34
2
மாற்கு 5:25-26
பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணும் அங்கே இருந்தாள். அவள் பல வைத்தியர்களிடம் மருத்துவம் செய்து துன்பத்திற்குள்ளாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவழித்து முடித்தும் குணமடையவில்லை. அவளுடைய நிலைமை மேலும் மோசமடைந்திருந்தது.
Explore மாற்கு 5:25-26
3
மாற்கு 5:29
உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது; தன்னுடைய வேதனையிலிருந்து தான் விடுதலை பெற்றதை அவள் தன் உடலிலே உணர்ந்தாள்.
Explore மாற்கு 5:29
4
மாற்கு 5:41
அவர் அவளுடைய கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூமி” என்றார். அதற்கு, “சிறு பெண்ணே, நான் உனக்குச் சொல்கின்றேன், உயிரோடு எழுந்திரு” என்பது அர்த்தமாகும்.
Explore மாற்கு 5:41
5
மாற்கு 5:35-36
இயேசு தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கையில், ஜெபஆலயத் தலைவனின் வீட்டிலிருந்து சிலர் வந்து அவனிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். ஏன் இனிமேலும் போதகருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டும்?” என்றார்கள். அவர்கள் சொன்னதை இயேசு பொருட்படுத்தாமல் ஜெபஆலயத் தலைவனிடம், “பயப்படாதே, நம்பிக்கையாயிரு” என்றார்.
Explore மாற்கு 5:35-36
6
மாற்கு 5:8-9
ஏனெனில் இயேசு அவனிடம், “தீய ஆவியே, இவனைவிட்டு வெளியேறு!” என்று சொல்லியிருந்தார். அப்போது இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவன், “என் பெயர் லேகியோன். ஏனெனில், நாங்கள் அநேகராயிருக்கிறோம்” என்று பதிலளித்தான்.
Explore மாற்கு 5:8-9
Home
Bible
Plans
Videos