1
மாற்கு 6:31
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
அங்கே அநேகர் வருவதும் போவதுமாய் இருந்தபடியால் அவர்களுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லாதிருந்தது. எனவே அவர் அவர்களிடம், “நாம் போய் அமைதியான இடத்தில் இளைப்பாறுவோம்” என்றார்.
Compare
Explore மாற்கு 6:31
2
மாற்கு 6:4
இயேசு அவர்களிடம், “ஒரு இறைவாக்கினருக்கு அவரது சொந்த ஊரிலும், அவரது உறவினர் மத்தியிலும், அவரது குடும்பத்தவருக்குள்ளும் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மதிப்புண்டு” என்றார்.
Explore மாற்கு 6:4
3
மாற்கு 6:34
அவர் கரை இறங்கியபோது திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டார். அவர்கள் மேய்ப்பன் இல்லாத செம்மறியாடுகளைப் போல் இருந்ததால், அவர்கள்மீது அவர் அனுதாபம்கொண்டு அவர்களுக்கு அநேக காரியங்களைப் போதிக்கத் தொடங்கினார்.
Explore மாற்கு 6:34
4
மாற்கு 6:5-6
நோயுற்ற ஒரு சிலர் மேல் தமது கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர அங்கு அவரால் வேறு அற்புதங்களை செய்ய முடியவில்லை. அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சென்று போதித்தார்.
Explore மாற்கு 6:5-6
5
மாற்கு 6:41-43
அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைவனுக்கு நன்றி செலுத்தி அப்பங்களைத் துண்டுகளாக்கினார். பின்பு அவர் அந்த அப்பங்களை மக்களுக்குக் கொடுக்கும்படி சீடர்களிடம் கொடுத்தார். அத்துடன் அந்த இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தார். அவர்கள் எல்லோரும் உணவு உண்டு திருப்தியடைந்தார்கள். சீடர்கள் மீதியான அப்பத் துண்டுகளையும் மீன்களையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
Explore மாற்கு 6:41-43
Home
Bible
Plans
Videos