ஏனெனில், மனிதருடைய இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், முறைகேடான பாலுறவு, களவு, கொலை, தகாத உறவு, பேராசை, அநியாயம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, அவதூறு, கர்வம், மதிகேடு போன்றவை வருகின்றன. தீமையான இவை யாவும் உள்ளத்திலிருந்து வருகின்றன. இவையே, மனிதனை அசுத்தப்படுத்துகின்றன” என்றார்.