YouVersion Logo
Search Icon

தானியேல் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டளவில் இறைவாக்கினன் தானியேலினால் எழுதப்பட்டது. தானியேல் வாலிபனாய் இருந்தபோது, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்ட நிலையிலுங்கூட அவர் கல்வி கற்று பாபிலோனில் ஒரு உயர்ந்த பதவியில் இருந்தார். இறைவனில் அவர் வைத்த நம்பிக்கையின் நிமித்தம் அவர் துன்புறுத்தப்பட்டார். அவர் இறைவனின் வல்லமையையும் வரப்போகும் கிறிஸ்துவையும் தரிசனமாகக் கண்டார். இந்த கிறிஸ்துவே இவ்வுலகத்திலுள்ள தீமையை அழித்து, இன்னும் அழிந்துபோகாத தம்முடைய நீதியின் அரசை நிலைநிறுத்துவார் என்று கூறுகிறார். மனித விவகாரங்களுக்கு மேலாக இறைவனே ஆட்சி செய்கிறார். மனிதரின் செயல்களைக்கொண்டு வரலாற்றை வழிநடத்துகிறவர் அவரே. இறைவனின் திட்டமே என்றென்றுமாய் நிலைநிற்கும். இதுவே இதில் காணப்படும் படிப்பினையாகும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in