YouVersion Logo
Search Icon

சங்கீதம் 2

2
சங்கீதம் 2
1நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?
மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?
2பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்,
ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும்,
அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:
3“அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து,
அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்.”
4பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்;
யெகோவா அவர்களை இகழ்கிறார்.
5அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து,
தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:
6“நான் எனது அரசனை
என் பரிசுத்த மலையாகிய சீயோனில்#2:6 அல்லது எருசலேம் பட்டணம் அமர்த்தியிருக்கிறேன்.”
7நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்:
அவர் என்னிடம் சொன்னதாவது, “நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.
8என்னிடம் கேளும்,
நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன்,
பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.
9நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்;
மண்பாண்டத்தை உடைப்பதுபோல்,
நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்.”
10ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;
பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.
11பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,
நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.
12இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்;
நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்;
ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும்.
அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for சங்கீதம் 2