YouVersion Logo
Search Icon

நாளாகமத்தின் முதலாம் புத்தகம் 7

7
இசக்காரின் சந்ததியினர்
1இசக்காருக்கு 4 குமாரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தோலா, பூவா, யசுப், சிம்ரோன் ஆகிய பெயர்களுண்டு.
2ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் ஆகியோர் தோலாவின் குமாரர்கள். அவர்கள் அனைவரும் தம் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்களும் அவர்களின் சந்ததிகளும் மிகப் பலமுள்ளவர்களாயிருந்தனர். தாவீது ராஜாவாகும் காலம்வரை அவர்களின் குடும்பம் வளர்ந்தது. அவர்களில் 22,600 பேர் போர் செய்ய தயாரானவர்கள்.
3ஊசியாவின் குமாரர்களில் ஒருவன் இஸ்ரகியா. இஸ்ரகியாவுக்கு மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா ஆகிய குமாரர்கள் இருந்தனர். இந்த 5 பேரும் அவர்களின் குடும்பத் தலைவராக இருந்தனர். 4இவர்களில் 36,000 பேர் போர் செய்யத் தகுதியுடைய வீரர்களாக இருந்தனர் என வம்ச வரலாறு கூறும். அவர்கள் ஏராளமான மனைவியரும், பிள்ளைகளும் பெற்றதால் குடும்பம் பெரிதாயிற்று.
5இசக்காரின் கோத்திரங்களில் ஆக மொத்தம் 87,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர் என்று குடும்ப வரலாறு கூறுகிறது.
பென்யமீனின் சந்ததியினர்
6பேலா, பெகேர், யெதியாயேல் எனும் மூன்று பேரும் பென்யமீனின் குமாரர்கள்.
7பேலாவிற்கு எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி எனும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் தத்தம் குடும்பங்களின் தலைவர்களாக இருந்தனர். இவர்களிடம் 22,034 வீரர்கள் இருந்தார்கள் என குடும்ப வரலாறு கூறுகிறது.
8செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனாதோத், அதுமேத் ஆகியோர் பெகேரின் குமாரர்கள். இவர்கள் பெகேரின் பிள்ளைகள். 9இவர்களின் குடும்ப வரலாறு குடும்பத் தலைவர்களைப்பற்றி கூறுகிறது. இவர்களிடம் 20,200 வீரர்கள் இருந்தனர் என்பதை குடும்ப வரலாறு காட்டுகிறது.
10யெதியாயேலின் குமாரர்களில் ஒருவன் பில்கான். ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் ஆகியோர் பில்கானின் குமாரர்கள். 11யெதியாயேலின் குமாரர்கள் குடும்பத் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் போருக்குத் தயாராக 17,200 வீரர்கள் இருந்தனர்.
12சுப்பீமியர்களும், உப்பீமியர்களும் ஈரின் சந்ததியினர். ஊசிம் ஆகேரின் குமாரர்களில் ஒருவன்.
நப்தலியின் சந்ததியினர்
13யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் ஆகியோர் நப்தலியின் குமாரர்கள்.
இவர்கள் பில்காளியின் சந்ததியினர்.
மனாசேயின் சந்ததியினர்
14கீழ்க்கண்டவர்கள் மனாசேயின் சந்ததியினர்: மனாசே அராமிய வேலைக்காரி மூலம் அஸ்ரியேல் என்ற குமாரன் பிறந்தான். அவர்களுக்கு மாகீர் என்ற குமாரனும் இருந்தான். இவன் கீலேயாத்தின் தந்தை. 15மாகீர் உப்பீமியர் மற்றும் சுப்பீமியர்களிடமிருந்தும் ஒரு பெண்ணை மணந்துக்கொண்டான். அவளது பெயர் மாக்காள். மாகீரின் சகோதரியின் பெயரும் மாக்காள். மாக்காளின் இரண்டாவது மனைவியின் பெயர் செலோப்பியாத். செலோப்பியாத்திற்கு குமாரத்திகள் மட்டுமே இருந்தார்கள். 16மாகீரின் மனைவியான மாக்காளிற்கு ஒரு குமாரன் இருந்தான். மாக்காள் தனது குமாரனுக்குப் பேரேஸ் என்று பெயரிட்டாள். பேரேஸின் சகோதரனின் பெயர் சேரேஸ். சேரேசுக்கு, ஊலாம், ரேகேம் எனும் குமாரர்கள் இருந்தனர்.
17ஊலாம் குமாரன் பேதான்.
இவர்கள் கீலேயாத்தின் சந்ததியினர். கீலேயாத் மாகீரின் குமாரன். மாகீர் மனாசேயின் குமாரன். 18மாகீரின் சகோதரியான அம்மொளெகேத்திற்கு இஸ்கோத், அபியேசர், மாகலா ஆகியோர் குமாரர்கள்.
19அகியான், சேகேம், லிக்கே, அனியாம் ஆகியோர் செமிதாவின் குமாரர்கள்.
எப்பிராயீமின் சந்ததியினர்
20கீழ்க்கண்டவை எப்பிராயீமின் சந்ததியினரின் பெயர்கள். எப்பிராயீமின் குமாரன் சுத்தெலாக். எப்பிராயீமின் குமாரர்களில் ஒருவன் சுத்தெலாக், சுத்தெலாக்கின் குமாரன் பேரேத், பேரேத்தின் குமாரன் தாகாத் 21தாகாத்தின் குமாரன் எலாதா, எலாதாவின் குமாரன் தாகாத், தாகாத்தின் குமாரன் சாபாத், சாபாத்தின் குமாரன் சுத்தெலாக்.
காத் நகரில் வளர்ந்த சிலர் எத்சோர், எலீயாத் ஆகியோரை கொன்றனர். எசேரும், எலீயட்டும் ஆடு மாடுகளைத் திருடும்பொருட்டு காத் நகருக்குச் சென்றார்கள் என்னும் காரணத்தால் இவர்கள் கொல்லப்பட்டார்கள். 22எத்சேர், எலீயாத் ஆகியோரின் தந்தை எப்பிராயீம். இவர்கள் மரித்துப் போனதால் இவன் அதிக நாட்கள் துக்கம் கொண்டாடினான். எப்பிராயீமின் குடும்பத்தினர் வந்து ஆறுதல் சொன்னார்கள். 23பிறகு, இவன் தன் மனைவியோடு பாலின உறவு கொண்டான். அவள் கர்ப்பமுற்று ஒரு குமாரனைப் பெற்றாள். அவன் தன் குமாரனுக்குப் பெரீயா என்று பெயர் வைத்தான். ஏனென்றால் அவன் பிறந்தபொழுது குடும்பத்துக்குப் பல தீங்குகள் ஏற்பட்டன. 24எப்பிராயீமின் குமாரத்தி பெயர் சேராள். இவள் கீழ்பெத்ரோன், மேல் பெத்ரோன், கீழ் ஊசேன் சேரா, மேல் ஊசேன் சேரா ஆகியவற்றைக் கட்டினாள்.
25எப்பிராயீமின் குமாரன் ரேப்பாக், ரேப் பாக்கின் குமாரன் ரேசேப், ரேசேப்பின் குமாரன் தேலாக், தேலாக்கின் குமாரன் தாகான். 26தாகானின் குமாரன் லாதான், லாதானின் குமாரன் அம்மியூத், அம்மியூத்தின் குமாரன் எலிஷாமா 27எலிஷாமாவின் குமாரன் நூன், நூனின் குமாரன் யோசுவா.
28கீழ்க்கண்ட நகரங்களிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் எப்பிராயீமின் சந்ததியினர் குடியிருந்தனர். அவை, பெத்தேலும், அதைச் சார்ந்த கிராமங்களும், கீழ்ப்புறமுள்ள நாரானும், மேற்கேயுள்ள கேசேரும், அதைச் சார்ந்த கிராமங்களும், சீகேமும் அதைச் சார்ந்த கிராமங்களும், அய்யாவரையுள்ள இடங்களும் அதைச் சார்ந்த கிராமங்களும். 29மனாசே ஜனங்களின் எல்லையுள்ள மெத்செயானும், அதைச் சார்ந்த கிராமங்களும் தானாக், மெகிதோ, தோர் ஆகிய நகரங்களும் அவற்றின் அருகில் உள்ள சிறு நகரங்களும். இவ்விடங்களில் யோசேப்பின் சந்ததியினர் குடியிருந்தார்கள். யோசேப்பு இஸ்ரவேலின் குமாரன்.
ஆசேரின் சந்ததியினர்
30இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா ஆகியோர் ஆசேரின் குமாரர்கள். இவர்களது சகோதரியின் பெயர் சேராள்.
31ஏபேர், மல்கியேல் ஆகியோர் பெரீயாவின் குமாரர்கள், மல்கியேல் பிர்சாவீத்தின் தந்தை.
32ஏபேர், யப்லோத்தையும் சோமேரையும் ஒத்தாமையும் இவர்களின் சகோதரியான சூகாளையும் பிள்ளைகளாகப் பெற்றான்.
33யப்லேத்திற்குப் பாசாக், பிம்மால், அஸ்வாத் ஆகிய குமாரர்கள் பிறந்தனர். இவர்கள் யப்லோத்தின் பிள்ளைகள்.
34அகி, ரோகா, எகூபா, ஆராம் ஆகியோர் சோமேரின் குமாரர்கள்.
35சோமேரின் சகோதரன் ஏலேம். சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் ஆகியோர் ஏலேமின் குமாரர்கள்.
36சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா.
37பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா ஆகியோர் சோபாக்கின் குமாரர்கள்.
38யெத்ரேனுக்கு எப்புனே, பிஸ்பா, ஆரா ஆகிய குமாரர்கள் இருந்தனர்.
39உல்லாவிற்கு ஆராக், அன்னியேல், ரித்சியா ஆகிய குமாரர்கள் இருந்தனர்.
40இவர்கள் அனைவரும் ஆசேரின் சந்ததியினர். இவர்கள் குடும்பத் தலைவர்கள், இவர்கள் மகத்தான மனிதர்கள், இவர்கள் வலிமைமிக்க வீரர்கள், திறமைமிக்க வீரர்களான இவர்களில் 26,000 பேர் போர் செய்வதற்குத் தயாரான வீரர்களாக இருந்தார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in