YouVersion Logo
Search Icon

நீதிமொழிகள் 21:1-8

நீதிமொழிகள் 21:1-8 TAERV

விவசாயிகள் சிறு வாய்க்கால்களைத் தோண்டி தம் வயல்களில் நீர்ப்பாய்ச்சுவார்கள். மற்ற வாய்க்கால் வழிகளை அடைத்து குறிப்பிட்ட ஒரு வாய்க்கால் வழியே மட்டும் நீர்ப்பாய்ச்சுவார்கள். இது போல்தான் ராஜாவின் மனதையும் கர்த்தர் கட்டுப்படுத்துகிறார். அவன் எங்கெல்லாம் போகவேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவனை கர்த்தர் வழி நடத்துகிறார். ஒருவன் தான் செய்வதையெல்லாம் சரி என்றே நினைக்கிறான். ஜனங்களின் செயல்களுக்காக கர்த்தரே சரியான காரணங்களோடு தீர்ப்பளிக்கிறார். சரியானதும் நேர்மையானதுமான செயல்களைச் செய்யுங்கள். பலிகளைவிட இத்தகையவற்றையே கர்த்தர் விரும்புகிறார். கர்வமுள்ள பார்வையும், பெருமையான எண்ணங்களும் பாவமானவை. ஒருவன் தீயவன் என்பதை அவை காட்டுகின்றன. கவனமான திட்டங்கள் இலாபத்தைத் தரும். ஆனால் ஒருவன் கவனம் இல்லாமலும் எதையும் அவசரகதியுமாகச் செய்துகொண்டும் இருந்தால், அவன் ஏழையாவான். நீ செல்வந்தனாவதற்காகப் பிறரை ஏமாற்றினால் உன் செல்வம் உன்னைவிட்டு வெகுவிரைவில் விலகிவிடும். உன் செல்வம் உன்னை மரணத்துக்கே அழைத்துச் செல்லும். தீயவர்களின் செயல்கள் அவர்களை அழித்துவிடும். அவர்கள் சரியானவற்றைச் செய்ய மறுக்கின்றனர். கெட்டவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை ஏமாற்றவே முயற்சி செய்கிறார்கள். ஆனால் நல்லவர்களோ நேர்மையானவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருக்கின்றனர்.