YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 23:1-6

சங்கீத புத்தகம் 23:1-6 TAERV

கர்த்தர் என் மேய்ப்பர். எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும். அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார். குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார். அவர் நாமத்தின் நன்மைக்கேற்ப, என் ஆத்துமாவிற்குப் புது வலிமையைத் தருகிறார். அவர் நல்லவரெனக் காட்டும்படி, நன்மையின் பாதைகளில் என்னை நடத்துகிறார். மரணத்தின் இருண்ட பள்ளத்தாக்குகளில் நான் நடந்தாலும் எந்தத் தீமைக்கும் பயப்படமாட்டேன். ஏனெனில் கர்த்தாவே, நீர் என்னோடிருக்கிறீர். உமது கோலும் தடியும் எனக்கு ஆறுதல் நல்கும். கர்த்தாவே, என் பகைவர்களின் முன்னிலையில் என் பந்தியை ஆயத்தமாக்கினீர். என் தலையில் எண்ணெயை ஊற்றினீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. என் ஆயுள் முழுவதும் உமது நன்மையும் இரக்கமும் என்னோடிருக்கும். நித்திய காலமாக நான் கர்த்தருடைய ஆலயத்தில் அமர்ந்திருப்பேன்.