இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த 1 சாமுவேல் 30:6

இடைப்பட்ட நிலையில் தங்களை கண்டுகொண்ட 4 வேதாகம கதாபாத்திரங்கள்
4 நாட்களில்
கிறிஸ்துமஸ் முடிந்துவிட்ட நிலையில், நாம் ஒரு விசித்திரமான “இடைப்பட்ட” காலத்தில் இருக்கிறோம் - கிறிஸ்துமஸின் கொண்டாட்டங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன, ஆனால் அன்றாட வாழ்க்கை இன்னும் முழுமையாகத் தொடங்கவில்லை. சில நேரங்களில், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும் அப்படியே, ஒரு “இடைப்பட்ட” இடத்தில் சிக்கித் தவிப்பது போல் தோன்றுகிறது. இந்த நாட்களைப் பயன்படுத்துவதற்கு, வேதத்தில் “இடைப்பட்ட” நிலையில் இருந்த நான்கு நபர்களைப் பற்றி சிந்திப்பதைவிட வேறு என்ன சிறந்தது?

மனஅழுத்தம்
9 நாட்களில்
வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.