இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபேசியர் 5:33
திருமணம்
5 நாட்கள்
திருமணம் ஒரு சவாலாகவும் பலன் தரக்கூடியதாகவும் திகழும் உறவாகும், நாமோ, "ஆமோதிக்கிறேன்" என்பது ஆரம்பம் தான் என்பதை மறந்து விடுகிறோம். நல்லகாலமாக, கணவருக்கும் மனைவிக்குமான பல விஷயங்களை அவரவர் கண்ணோட்டத்திலிருந்து வேதம் கூறுகிறது. இந்த குறுகிய வேத பகுதிகளானவை தினமும் நீங்கள் திருமண வாழ்க்கைக்கான கர்த்தருடைய வடிவமைப்பை புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது - இந்த செயல்முறையானது உங்கள் துணைவரோடு உங்கள் உறவை உறுதிப்படுத்தவும் உதவும்.
பொறுப்பு (கணக்கு ஒப்புவித்தல்)
7 நாட்கள்
பொதுவாக மனிதர்கள் என்ற முறையில், அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில் , நாம் அனைவருமே , பல்வேறு மட்டங்களில் , தேவனுக்கும் , நமது குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் , பணி செய்யும் இடங்களில் நமது முதலாளிக்கும் , நம்முடன் இணைந்து பணியாற்றும் குழுவினருக்கும் கணக்கு ஒப்புவிக்கும் பொறுப்புடையவர்களாய் இருக்கின்றோம். ஆனால் , மனித இயல்பானது ,யாருக்கும் கணக்கு ஒப்புவிக்க விரும்புவதில்லை. கடவுளுக்கு கணக்கு ஒப்புவித்தல் என்பது மற்ற எல்லா பொறுப்புடைமைக்கும் பொருந்தக்கூடிய அடிப்படை அம்சமாகும் .
எபேசியர்
28 நாட்கள்
கடவுள் தம் குழந்தைகளுக்கு என்ன விரும்புகிறார் என்ற அழகான உயரத்திலிருந்து, எபேசியர்களுக்கு எழுதிய கடிதம் கடவுளின் கிருபையிலும், அமைதியிலும், அன்பிலும் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எபேசியர்ஸ் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.