வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத்தேயு 11:28

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

9 நாட்களில்

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.