இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த நீதிமொழிகள் 3:5

வாலண்டைன் தினம்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டத்தில்
5 நாட்களில்
வாலண்டைன் தினம் விடியும்போது, உண்மையான அன்பு, தியாகம் மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒருங்கிணைந்த சிந்தையை வெளிப்படுத்துகிறது. இதயத்தின் விஷயங்களில் நாம் செய்யும் தேர்வுகளைச் சுற்றியுள்ள வேதாகமம் ஞானத்தைப் பற்றி சிந்திப்பது மிக முக்கியமானது. தேவனுடைய வார்த்தையில் தொகுக்கப்பட்ட காலமற்ற கொள்கைகளை நாம் அறிந்து கொள்ள முயல்வோம்.

பதின்ம வயது மற்றும் பெற்றோர் - சந்தோஷங்கள் மற்றும் சவால்கள்
6 நாட்களில்
கிறிஸ்தவ சமூகத்திற்குள் இளமைப் பருவத்தை வழிநடத்துவது பதின்ம வயதினருக்கும் பெற்றோர்களுக்கும் தனித்துவமான சவால்களை அளிக்கிறது. நம்பிக்கை மற்றும் நண்பர்களின் அழுத்தத்தை சமநிலைப்படுத்துவது முதல் வளர்ந்து வரும் சமூக விதிமுறைகளை நிவர்த்தி செய்வது வரை, இந்த பயணத்திற்கு ஒரு நுட்பமான சமநிலை தேவைப்படுகிறது. கிறிஸ்தவ வட்டத்தில் பதின்ம வயதினரும் அவர்களது பெற்றோர்களும் எதிர்கொள்ளும் சவால்களின் நுணுக்கங்களை நாம் ஆராய்வோம். நம்பிக்கை, உறவுகள் மற்றும் கலாச்சார மாற்றங்களை ஆராய்ந்து, கொந்தளிப்பான பதின்ம வயது ஆண்டுகளில் இணக்கமான ஆத்தும மற்றும் குடும்பப் பயணத்தை வளர்ப்பதற்கு நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார்
6 நாட்களில்
இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் பல நேரங்களில் அதிகமாக உணரலாம். மேலும் சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும் கூட இயற்கையானது. இருப்பினும், வேதாகமக் கண்ணோட்டத்தில், தேவன் ஒரு குறிப்பிட்ட, சுத்திகரிப்பு நோக்கத்திற்காக சோதனைகளை அனுமதிக்கிறார் என அறிய வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அது நம் நம்பிக்கையைத் தூய்மைப்படுத்தவும், அவருடைய சாயலுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரவும் செய்கிறது. சோதனைகள் மூலம் சுத்திகரிப்பு செயல்முறை ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயேசு என்னை நேசிக்கிறார்
7 நாட்கள்
யாரோ ஒருவர், "நான் கிறிஸ்தவனாயிருப்பதற்கு எதை விசுவாசிக்க வேண்டும்?" என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இயேசு என்னை நேசிக்கிறார், இதை நான் அறிவேன், ஏனெனில் வேதாகமம் அவ்வாறு சொல்லுகிறது”, என்ற நேசிக்கப்படுகிற பாடலின் வரிகளைக் கொண்டு எதை விசுவாசிக்க வேண்டும் ஏன் என்று பத்திரிக்கையாளராய் இருந்து போதகரானவர் விளக்குகிறார். சிறந்த ஆசிரியர் ஜான் எஸ், டிக்கர்சன் அவசியமான கிறிஸ்தவ நம்பிக்கைகளையும் அவை எதனால் முக்கியம் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் விளக்குகிறார்.

ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி?
7 நாட்களில்
Description: உன் கடந்த கால வாழ்வு உன்னை முன்னேறவிடாமல் தடுக்கிறதா? தவறு செய்துவிடுவேனோ என்று எண்ணி தயங்கி நிற்கிறாயா? "ஆண்டவருக்காக நிற்காமல் ஓடுவது எப்படி" என்ற இந்த தியானத்தின் மூலம், உன் கிறிஸ்தவ வாழ்க்கையிலும், ஆண்டவர் உனக்காக வைத்திருக்கும் திட்டங்களிலும் முன்னேறுவதற்கான பல திறவுகோல்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென என் இருதயத்தில் வாஞ்சிக்கிறேன்! பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, தடைகளைத் தகர்த்தெறிகிற ஆண்டவரோடு இணைந்து முன்னணறிச் செல்வாயாக.

குழந்தையாக இருக்காதீர்கள்! குழந்தையைப் போல இருங்கள். குழந்தைபோன்ற விசுவாசத்தை ஆராய 7 நாட்கள்.
7 நாட்களில்
மத்தேயு 18:3ல் (TAOVBSI) இயேசு, “நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறுகிறார். அவர் சொன்னதன் அர்த்தம் என்னர்? அவர் எதைக் குறிப்பிடுகிறார்? இந்த ஒரு வார கால திட்டம், நாம் அடைய வேண்டிய 'சிறுபிள்ளைப் போன்ற விசுவாசத்தின்' ஏழு அம்சங்களை விவரிக்கிறது.

விட்டுவிடு, ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு...
7 நாட்களில்
வாருங்கள் செல்வோம்! அனைத்தையும் விட்டுவிடுவோம், அனைத்தையும் ஆண்டவரிடம் ஒப்படைப்போம்! உங்களை தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கும் சில விஷயங்களை ஒதுக்கிவிட்டு, அவற்றை தேவனிடம் சமர்ப்பித்து, அவர் உங்கள் வாழ்க்கையை வழிநடத்த அனுமதிப்பதற்கான ஒரு 7 நாள் பயணம் இது.

ஞானம்
12 நாட்கள்
வேதம் ஞானத்தை எல்லாவற்றிற்கும் மேலாக நாட வேண்டுமென்று அறைகூவுகிறது. இந்தத்திட்டத்தில் தினமும் ஞானத்தை நேரடியாகக் குறிக்கும் பல வேத வசனங்களை நீங்கள் ஆராய்வீர்கள் - அது என்ன, அது ஏன் முக்கியமானது, அதை எப்படி விருத்தி செய்வது.

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு
13 நாட்கள்
தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட வாழ்க்கைக்கான வாக்குறுதிகள்
14 நாட்கள்
ஜாய்ஸ் மேயரின் நடைமுறை வேதபாட போதனையுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான வேத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும், உங்கள் மனதைப் புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நோக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் என்பதைக் கண்டறிய உதவுகிறது!

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்
28 நாட்கள்
நீங்கள் திணறிக்கொண்டோ, அதிருப்தியிலோ, ஒரு செல்தடத்தில் மாட்டிகொண்டோ இருப்பதாக உணர்கிறீர்களா? தினசரி வாழ்வில் முன்னேற்றம் அடைய விரும்புகிறீர்களா? கர்த்தருடைய வார்த்தை ஒளிமிகும் நாட்களுக்கான உங்கள் வழிகாட்டியாகும். இந்த 28 நாள் வாசிப்புத் திட்டத்தில் நீங்கள் ஒரு சாதாரண நல்ல வாழ்வு வாழ்வதிலிருந்து, எவ்வாறு கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் சிறந்த வாழ்வை வாழலாமென்ற வழிமுறைகளைக் கண்டுகொள்வீர்கள்.

நீதிமொழிகள்
31 நாட்கள்
பழமொழிகள் என்பது நீண்ட அனுபவங்களிலிருந்து வரையப்பட்ட குறுகிய வாக்கியங்கள், அவை நினைவில் கொள்ள எளிதான வழியில் உண்மையைக் கற்பிக்கின்றன - ஞானமான முடிவுகளை எடுக்க உதவும் உண்மைகள். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளின் வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் பழமொழிகளின் வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.