1
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:17
பரிசுத்த பைபிள்
அதற்குப் பிறகு, அவர்களோடு அப்பொழுது வாழும் நாமும் எடுத்துச்செல்லப்படுவோம். கர்த்தரை வான வெளியில் சந்திப்போம். அதன் பின் எப்பொழுதும் கர்த்தரோடு இருப்போம்.
ஒப்பீடு
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:17 ஆராயுங்கள்
2
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:16
கர்த்தர் அவராகவே பரலோகத்தில் இருந்து வருவார். அங்கே உரத்த கட்டளை இருக்கும். அக்கட்டளை பிரதான தேவ தூதனுடையதாக இருக்கும். தேவ எக்காளமும் கேட்கும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் இறந்து போனவர்கள் முதலில் உயிர்த்தெழுவார்கள்.
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:16 ஆராயுங்கள்
3
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:3-4
நீங்கள் பரிசுத்தமுடன் இருக்க தேவன் விரும்புகிறார். நீங்கள் பாலியல் குற்றத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். உங்கள் சரீரத்தைக் கட்டுப்படுத்த நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் சரீரத்தைத் தூய்மையாய் வைத்துக்கொள்ளுங்கள். அது தேவனுக்குப் பெருமை சேர்க்கும்.
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:3-4 ஆராயுங்கள்
4
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:14
இயேசு இறந்தார், ஆனால் அவர் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறோம். ஆகையால் இயேசுவை விசுவாசித்து மரித்துப்போன எல்லாரையும் தேவன் இயேசுவோடுகூட ஒன்று சேர்ப்பார்.
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:14 ஆராயுங்கள்
5
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:11
சமாதானத்துக்குரிய வாழ்க்கையை வாழ நீங்கள் எல்லா செயல்களையும் செய்யுங்கள். உங்கள் சொந்தக் காரியங்களில் கவனமாய் இருங்கள், சொந்த வேலைகளைச் செய்யுங்கள். இவற்றையெல்லாம் செய்யுமாறு ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்.
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:11 ஆராயுங்கள்
6
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:7
நாம் பரிசுத்தமாய் இருக்கும்படி தேவன் அழைத்தார். நாம் பாவங்களில் வாழ்வதை அவர் விரும்பவில்லை.
தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்