1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:46
பரிசுத்த பைபிள்
சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் “ ஏலி, ஏலி, லாமா சபக்தானி ” என்று கதறினார். இதன் பொருள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
ஒப்பீடு
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:46 ஆராயுங்கள்
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:51-52
இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:51-52 ஆராயுங்கள்
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:50
மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:50 ஆராயுங்கள்
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:54
இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள், “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:54 ஆராயுங்கள்
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:45
நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:45 ஆராயுங்கள்
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:22-23
“அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான். “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள். “அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான். ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:22-23 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்