1
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:14
பரிசுத்த பைபிள்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
ஒப்பீடு
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:14 ஆராயுங்கள்
2
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:8
எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:8 ஆராயுங்கள்
3
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:1
நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:1 ஆராயுங்கள்
4
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:12
“இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:12 ஆராயுங்கள்
5
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:10
அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:10 ஆராயுங்கள்
6
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:7
அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 13:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்