1
யோவான் 5:24
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
“நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பியவரை விசுவாசிக்கின்றவன் எவனோ, அவனுக்கு நித்திய வாழ்வு உண்டு. அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்படாமல், மரணத்தைக் கடந்து, வாழ்வுக்கு உட்பட்டிருக்கிறான்.
ஒப்பீடு
யோவான் 5:24 ஆராயுங்கள்
2
யோவான் 5:6
இயேசு அவனைக் கண்டு, அவன் அங்கே அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்து அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
யோவான் 5:6 ஆராயுங்கள்
3
யோவான் 5:39-40
நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கின்றீர்கள். ஏனெனில், அவற்றில் நித்திய வாழ்வு உண்டு என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. ஆயினும் வாழ்வைப் பெற்றுக்கொள்ளும்படி, என்னிடம் வர மறுக்கிறீர்கள்.
யோவான் 5:39-40 ஆராயுங்கள்
4
யோவான் 5:8-9
அப்போது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே, அந்த மனிதன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடந்து சென்றான். இது ஒரு ஓய்வுநாளில் நிகழ்ந்தது.
யோவான் 5:8-9 ஆராயுங்கள்
5
யோவான் 5:19
இயேசு அவர்களிடம்: “நான் உங்களுக்கு உண்மையாகவே உண்மையாகவே சொல்கின்றேன், எவைகளையெல்லாம் பிதா செய்கின்றதை மகன் காண்கின்றாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்ய மாட்டார்; பிதா எவைகளைச் செய்கின்றாரோ, அவைகளையே மகனும் செய்கின்றார்.
யோவான் 5:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்