பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, “நீர் இறைவனின் மகனானால், இங்கிருந்து கீழே குதியும். ஏனெனில்,
“ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி,
இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்;
உமது பாதம் கற்களின் மீது மோதாதபடி,
அவர்கள் தமது கைகளினால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே”
என்றான்.
அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.