அதற்கு இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு மனதுடனும், உன் முழு பலத்துடனும் அன்பு செய்வாயாக’ என்பதே மிகவும் முக்கியமான கட்டளை. அதற்கு அடுத்த கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போலவே, உன் அயலானிலும் அன்பாய் இரு.’ இவற்றைவிட பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார்.