1
மாற்கு 2:17
இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “நலமாய் இருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை. வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நீதிமான்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
ஒப்பீடு
மாற்கு 2:17 ஆராயுங்கள்
2
மாற்கு 2:5
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
மாற்கு 2:5 ஆராயுங்கள்
3
மாற்கு 2:27
பின்பு அவர் அவர்களிடம், “மனிதனுக்காகவே ஓய்வுநாள் ஏற்படுத்தப்பட்டது; ஓய்வுநாளுக்காக மனிதன் உண்டாக்கப்படவில்லை.
மாற்கு 2:27 ஆராயுங்கள்
4
மாற்கு 2:4
ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவிடம் கொண்டுவர முடியவில்லை; எனவே அவர்கள், இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்து திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனை அவன் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
மாற்கு 2:4 ஆராயுங்கள்
5
மாற்கு 2:10-11
ஆயினும், பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்று சொல்லிவிட்டு, அவர் முடக்குவாதக்காரனிடம், “நான் உனக்குச் சொல்கின்றேன், எழுந்திரு! உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, வீட்டுக்குப் போ” என்றார்.
மாற்கு 2:10-11 ஆராயுங்கள்
6
மாற்கு 2:9
நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது இலகுவானது?
மாற்கு 2:9 ஆராயுங்கள்
7
மாற்கு 2:12
உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்து சென்றான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
மாற்கு 2:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்