மத் 14:25-33

மத் 14:25-33 IRVTAM

அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார். பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான். காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத் 14:25-33

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு மத் 14:25-33 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.