மத் 6:28-34

மத் 6:28-34 IRVTAM

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறது ஏன்? காட்டுப்பூக்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன்கூட தன் சர்வமகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாவது உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். விசுவாசக்குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப்புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாமல் இருங்கள். இவைகளையெல்லாம் தேவனை அறியாதவர் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்களுடைய பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். ஆகவே, நாளைக்காகக் கவலைப்படாமல் இருங்கள்; நாளையதினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த மத் 6:28-34

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள் மத் 6:28-34 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 நாட்களில்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.