அபிகாயில் நாபாலிடம் திரும்பிவந்தாள். அப்பொழுது அவன் வீட்டில் அரசவிருந்தைப்போன்ற ஒரு விருந்தினை நடத்திக்கொண்டிருந்தான். அவன் மதுபோதையில் களிப்புற்றிருந்தான். எனவே அவள் விடியும்வரை அவனுக்கு ஒன்றுமே சொல்லவில்லை. பொழுது விடிந்ததும் நாபாலின் மதுவெறி தெளிந்தபின் அவன் மனைவி நடந்தவற்றையெல்லாம் அவனுக்குச் சொன்னாள். அதைக் கேட்டவுடன் அவன் இருதயம் பாதிக்கப்பட்டு அவன் கல்லைப்போலானான். இவை நடந்து ஏறக்குறைய பத்து நாட்களுக்குப்பின்பு யெகோவா நாபாலை அடித்ததினால் அவன் இறந்தான். நாபால் இறந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, “என்னை அவமானப்படுத்திய நாபாலுக்கு எதிரான எனது வழக்கை வாதாடிய யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக. அவர் தமது அடியவனை குற்றம் செய்யாதபடி தற்காத்து, நாபாலின் அநியாயத்தை அவனுடைய தலையிலேயே சுமரப்பண்ணினார்” என்றான். அதன்பின் தாவீது அபிகாயிலைத் தன் மனைவியாக்கும்படி கேட்டு அவளிடம் ஆளனுப்பினான். தாவீதின் பணியாட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “தாவீது உம்மைத் தன் மனைவியாக்கிக் கொள்வதற்காகத் தன்னிடம் கூட்டிக்கொண்டு வரும்படி எங்களை உம்மிடம் அனுப்பினார்” என்றார்கள். அவள் எழுந்து முகங்குப்புற விழுந்து வணங்கி, அவர்களிடம், “இதோ நான் உங்கள் பணிப்பெண். உங்களுக்குப் பணிசெய்யவும், என் எஜமானின் பணியாட்களின் கால்களைக் கழுவவும் நான் ஆயத்தமாயிருக்கிறேன்” என்றாள். அபிகாயில் விரைவாகக் கழுதையில்மேல் ஏறி தன் ஐந்து தோழிகளும் பின்செல்ல தாவீதின் தூதுவர்களுடன் சென்று அவனுக்கு மனைவியாகினாள். தாவீது யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமையும் திருமணம் செய்திருந்தான். அவர்கள் இருவரும் தாவீதின் மனைவிகளாயிருந்தார்கள். ஆனால் சவுல் தன் மகளான மீகாள் என்னும் தாவீதின் மனைவியை, காலீம் ஊரானான லாயீசின் மகன் பல்த்திக்கு மனைவியாகக் கொடுத்தான்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 சாமுயேல் 25
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 சாமுயேல் 25:36-44
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்