எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன். அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம். இது நன்மையானதாகவும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமுமாயிருக்கிறது. அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார். ஏனெனில் இறைவன் ஒருவரே. இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. மனிதனாக வந்த கிறிஸ்து இயேசுவே அந்த நடுவர்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் 1 தீமோத்தேயு 2
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 தீமோத்தேயு 2:1-5
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்