ஆமோஸ் 5:1-3

ஆமோஸ் 5:1-3 TCV

இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்: “இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள், இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள். தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள். அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.” ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள். நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.”