ஆகாய் 2:10-13

ஆகாய் 2:10-13 TCV

தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஒன்பதாம் மாதம் இருபத்து நான்காம் நாள், ஆகாய் என்னும் இறைவாக்கினனுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. “சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘நீ ஆசாரியர்களிடம், சட்டம் சொல்வது என்ன? என்று கேள்: உங்களில் ஒருவன் தன் அங்கியின் மடிப்பில் அர்ப்பணிக்கப்பட்ட இறைச்சியை கொண்டுபோகையில், அங்கியின் மடிப்பு, அப்பத்தையோ சமைக்கப்பட்ட உணவையோ திராட்சை இரசத்தையோ எண்ணெயையோ வேறு ஏதாவது தின்பண்டத்தையோ தொட்டால் அது பரிசுத்தமாக்கப்படுமா?’ ” என்று கேட்டான். அதற்கு ஆசாரியர்கள், “இல்லை” என விடையளித்தனர். அப்பொழுது ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் அசுத்தமான ஒருவன், இவற்றில் எதையாகிலும் தொட்டால், அது அசுத்தமாகுமா?” என்று கேட்டான். அதற்கு ஆசாரியர்கள், “ஆம், அசுத்தமாகும்” என்றார்கள்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஆகாய் 2:10-13