ஓசியா 2:17-23

ஓசியா 2:17-23 TCV

“நான் அவளுடைய உதடுகளிலிருந்து பாகால்களின் பெயர்களை அகற்றிவிடுவேன்; அவற்றின் பெயர்கள் இனி ஒருபோதும் சொல்லி வணங்கப்படமாட்டாது. அந்நாளிலே நான் அவர்களுக்காக வெளியின் மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் பிராணிகளோடும் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவேன். நான் வில்லையும் வாளையும் யுத்தத்தையும் நாட்டில் இராதபடி செய்வேன்; அதனால் அவர்கள் எல்லோரும் படுக்கும்போது பாதுகாப்பாய் இருப்பார்கள். நான் உன்னை என்றென்றைக்கும் எனக்கென்று நிச்சயித்துக்கொள்வேன்; நான் உன்னை நீதியுடனும், நியாயத்துடனும், அன்புடனும், கருணையுடனும் நிச்சயித்துக்கொள்வேன். நான் உண்மையோடு உன்னை எனக்காக நிச்சயித்துக்கொள்வேன்; நீயும் யெகோவாவை ஏற்றுக்கொள்வாய். “அந்த நாட்களிலே நான் பதில் கொடுப்பேன்” என்கிறார் யெகோவா: “நான் ஆகாயங்களுக்குக் கட்டளை கொடுப்பேன், அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும். பூமியானது தானியம், புதுத் திராட்சை இரசம், எண்ணெய் ஆகியவற்றுக்கு மறுமொழி கொடுக்கும்; இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். நாட்டில் நான் அவளை எனக்கென்று நாட்டுவேன்; ‘என் அன்புக்குரியவள் அல்ல’ என்று நான் அழைத்தவளுக்கு நான் எனது அன்பைக் காட்டுவேன். ‘என்னுடைய மக்கள் அல்ல’ என்று அழைக்கப்பட்டவர்களை, ‘நீங்கள் என்னுடைய மக்கள்’ என்று சொல்வேன்; அவர்களும், ‘நீரே எங்கள் இறைவன்’ என்று சொல்வார்கள்.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ஓசியா 2:17-23