ஏசாயா 56:6-8

ஏசாயா 56:6-8 TCV

யெகோவாவை அண்டியிருந்து, அவருக்கு ஊழியம் செய்து, யெகோவாவினுடைய பெயரை நேசித்து அவரை வழிபடும் பிறதேசத்தார் அனைவருக்கும், ஓய்வுநாட்களை தூய்மைக்கேடாக்காமல் அதைக் கைக்கொண்டு எனது உடன்படிக்கையை உறுதியாய் பற்றிக்கொள்ளும் அனைவருக்கும் சொல்வதாவது: நான் அவர்களை என் பரிசுத்த மலைக்குக் கொண்டுவந்து, என் ஜெபவீட்டில் அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பேன். அவர்களின் தகனபலிகளும், மற்ற பலிகளும் எனது பலிபீடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஏனெனில், எனது வீடு எல்லா நாடுகளுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும். நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேலரைச் சேர்க்கும் ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்: ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களோடுகூட இன்னும் மற்றவர்களையும் நான் கூட்டிச்சேர்ப்பேன்.”