சங்கீதம் 1 முன்னுரை

1 முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. தாவீது அரசனே சங்கீதங்களில் பலவற்றை எழுதினார். அவரைத்தவிர வேறு பலரும் இப்புத்தகத்திலுள்ள சங்கீதங்களை எழுதியிருக்கிறார்கள். இப்புத்தகம் தற்காலத்தில் விருப்பத்துடன் வாசிக்கப்படுவது போல முற்காலத்திலும் வாசிக்கப்பட்டது. சங்கீதங்களில் கவலை, மகிழ்ச்சி, கோபம், சாந்தம், சந்தேகம், விசுவாசம், மனந்திரும்புதல், துதி ஆகியவை வெளிப்படுத்தப்படுகின்றன. பல இடங்களில் இறைவனின் மேசியாவாகிய இயேசுகிறிஸ்து துன்பம் அனுபவிக்கிறவராகவும், மகிமையுடையவராகவும் சித்தரிக்கப்படுகிறார். தற்காலத்தில் திருச்சபையில் பாடல் புத்தகம் பயன்படுத்தப்படுவது போலவே, அக்காலத்தில் சங்கீதப்புத்தகம் இறைவழிபாட்டில் பயன்படுத்தப்பட்டது. இறைவன் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதினால், நாம் அவரிடம் மன்றாடும்போது, அவர் நமக்கு விடுதலையளித்து உதவிசெய்ய வல்லவராய் இருக்கிறார் என்பதே இதில் நாம் காணும் முக்கிய பாடமாகும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங்கீதம் 1 முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்