செப்பனியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. யூதா அரசு கி.மு. 586 இல் அழிக்கப்படுவதற்கு முன்னதாக உள்ள காலகட்டத்தில் செப்பனியா அங்கு இறைவாக்குரைத்தார். செப்பனியாவினுடைய செய்தியின் பிரதிபலனாக யோசியா அரசன் சீர்திருத்தங்களைச் செய்தார். ஆனாலும் மக்கள் திரும்பவும் தங்கள் தீய வழிகளுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.
இறைவன் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை வழங்கும்போது, இறைவனை அறிந்தும் அவருக்கு கீழ்படியாதவர்கள் தண்டனை பெறுவார்கள். யூதா அரசிற்கு முதலாவது நியாயத்தீர்ப்பு வரும். அதன்பின்னரே மற்ற நாடுகளின்மேல் நியாயத்தீர்ப்பு வரும். இதுவே செப்பனியாவின் முக்கிய செய்தி.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

செப்பனியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்