ஆமோத்சின் குமாரனான ஏசாயா யூதா மற்றும் எருசலேம் பற்றியச் செய்தியைப் பார்த்தான். கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும். இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும். அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள். ஏராளமான ஜனங்கள் அங்கு போவார்கள். அவர்கள், “நாம் கர்த்தருடைய மலைக்குப்போவோம் நாம் யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப்போவோம். பின் தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்றுத்தருவார். நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள். தேவனாகிய கர்த்தருடைய போதனைகளும் செய்தியும் சீயோன் மலையிலுள்ள எருசலேமில் துவங்கி, உலகம் முழுவதும் பரவும். பிறகு, தேவனே அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கும் நீதிபதியாவார். தேவன் பலரது வாக்குவாதங்களை முடித்துவைப்பார். சண்டைக்காகத் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை ஜனங்கள் நிறுத்துவார்கள். அவர்கள் தங்கள் வாள்களை கலப்பையின் கொழுவாகச் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஈட்டிகளிலிருந்து செடிகளை வெட்டும் கருவிகளைச் செய்வார்கள். ஜனங்கள், மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள். ஜனங்கள் மீண்டும் யுத்தத்திற்குரிய பயிற்சி பெறமாட்டார்கள்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:1-4
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்