இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு. ஈசாக்கின் குமாரன் யாக்கோபு. யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும் அவன் சகோதரர்களும். யூதாவின் மக்கள் பாரேசும் சாராவும் (அவர்களின் தாய் தாமார்.) பாரேசின் குமாரன் எஸ்ரோம். எஸ்ரோமின் குமாரன் ஆராம். ஆராமின் குமாரன் அம்மினதாப். அம்மினதாபின் குமாரன் நகசோன். நகசோனின் குமாரன் சல்மோன். சல்மோனின் குமாரன் போவாஸ். (போவாசின் தாய் ராகாப்.) போவாசின் குமாரன் ஓபேத். (ஓபேத்தின் தாய் ரூத்.) ஓபேத்தின் குமாரன் ஈசாய். ஈசாயின் குமாரன் ராஜாவாகிய தாவீது. தாவீதின் குமாரன் சாலமோன். (சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)
வாசிக்கவும் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1
கேளுங்கள் மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மத்தேயு எழுதிய சுவிசேஷம் 1:1-6
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்