சங்கீத புத்தகம் 78:29-32

சங்கீத புத்தகம் 78:29-32 TAERV

அவர்களுக்கு உண்பதற்கு மிகுதியான உணவு இருந்தது. ஆனால் தங்களின் பசியால் தாங்களே பாவம் செய்யும்படி தங்களை அவர்கள் ஆட்படுத்திக்கொண்டார்கள். அவர்கள் தங்கள் பசியை அடக்கிக்கொள்ளவில்லை. எனவே அவர்கள் பறவைகளின் இரத்தம் வடிந்து போகும்வரை காத்திராது அக்காடைகளை உண்டார்கள். தேவன் அந்த ஜனங்களிடம் மிகவும் கோபங்கொண்டார். அவர்களில் பலரைக் கொன்றுபோட்டார். பல ஆரோக்கியமான இளைஞர்கள் இறக்கும்படி செய்தார். ஆனால் ஜனங்களோ இன்னும் பாவம் செய்தார்கள்! தேவன் செய்ய வல்ல அற்புதமான காரியங்களை அவர்கள் சார்ந்திருக்கவில்லை.