யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 18:3-10

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 18:3-10 TAERV

அவளுடைய வேசித்தனத்தினுடையதும் தேவனுடைய கோபமானதுமான மதுவை எல்லாத் தேசங்களும் குடித்தன. உலகிலுள்ள ராஜாக்கள் அவளோடு வேசித்தனம் செய்தார்கள். உலகிலுள்ள வியாபாரிகள் அவளது மாபெரும் செல்வச் செழிப்பில் இருந்து செல்வர்கள் ஆனார்கள்.” பிறகு நான் பரலோகத்திலிருந்து இன்னொரு குரலையும் கேட்டேன். “ஓ! என் மக்களே, அவளுடைய பாவத்தில் உங்களுக்குப் பங்கில்லாதபடிக்கு வெளியே வாருங்கள். பிறகு அவளுக்கிருக்கும் வாதைகள் எதுவும் உங்களுக்கிருக்காது. அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன. தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை. அவள் கொடுத்ததைப்போலவே நீங்களும் அந்நகருக்கு கொடுங்கள். அவள் கொடுத்ததைப்போல இருமடங்கு திருப்பிச் செலுத்துங்கள். மற்றவர்களுக்கு அவள் தயாரித்த அடர்த்தியான மதுவைப்போல இருமடங்கு அடர்த்தியான மதுவை அவளுக்காகத் தயார் செய்யுங்கள். அவள் தனக்கு செல்வ வாழ்வையும் அதிக மகிமையையும் அளித்துக்கொண்டாள். அதே அளவு துன்பத்தையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். அவள் தனக்குத் தானே, ‘என் சிம்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டிருக்கிற நான் ஒரு ராணி. நான் விதவை அல்ல. நான் எக்காலத்திலும் துக்கப்படமாட்டேன்’ என்று சொல்லிக்கொள்கிறாள். எனவே ஒருநாளில் இக்கேடுகள் அவளுக்கு வரும். அவை மரணம், அழுகை, பெரும் பசியாய் இருக்கும். அவள் நெருப்பால் அழிக்கப்படுவாள். ஏனென்றால் அவளை நியாயந்தீர்க்கிற தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.” “அவளோடு வேசித்தனம் புரிந்து அவளுடைய செல்வத்தைப் பகிர்ந்துகொண்ட பூமியின் எல்லா ராஜாக்களும் அவள் எரியும்போது வரும் புகையைக் காண்பார்கள். அவளது மரணத்துக்காக அவர்கள் அழுது துக்கப்படுவார்கள். அவளது துன்பத்தைக் கண்டு ராஜாக்கள் அஞ்சி விலகி நிற்பார்கள். அவர்கள் சொல்வார்கள்