1 யோவான் 2:19
1 யோவான் 2:19 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது.
1 யோவான் 2:19 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆனாலும் அவர்கள் நம்முடையவர்களாக இருக்கவில்லை; நம்முடையவர்களாக இருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லோரும் நம்முடையவர்கள் இல்லை என்று வெளிப்படுத்துவதற்காகவே பிரிந்துபோனார்கள்.
1 யோவான் 2:19 பரிசுத்த பைபிள் (TAERV)
நமது குழுவிலேயே கிறிஸ்துவின் பகைவர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் நம்மை விட்டுச் சென்றுவிட்டனர். அவர்கள் நம்மோடு சேர்ந்தவர்களாக வாழவில்லை. உண்மையிலேயே நம் குழுவில் உள்ளவர்களாக அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் பிரிந்தனர். அவர்களில் ஒருவர் கூட நம்மோடு உண்மையாகச் சேர்ந்திருந்ததில்லை என்பதை இது காட்டுகிறது.